

மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் வரும் 27-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் நடத்தும் என்று கட்சித்தலைவர் மாயாவதி நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசின் கொள்கைகளும் திட்டங்களும் மக்கள் விரோதமானவை. தொழில திபர்களுக்கு ஆதரவானவை. இந்த அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்டவை நன்மை பயக்காது. இதை அம்பலப்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவில் போராட்டம் நடத்தும். முதல் கட்டமாக உத்தரப் பிரதேசத் தில் கட்சியின் மாவட்ட தலைமை யகங்கள் அனைத்திலும் ஆர்ப் பாட்டம், தர்ணாக்கள் வரும் 27-ம் தேதி காலை 11 மணி அளவில் நடத்தப்படும். இதேபோன்ற போராட்டங்கள் கட்சி வலுவாக உள்ள இதர மாநிலங்களிலும் நடத்தப்படும்.
விவசாயிகளுக்கு எதிரான நில மசோதா, மழை, புழுதிப் புயலால் விளைச்சலை பறிகொடுத்து துயரில் வாடும் விவசாயிகளை புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகள், உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது ஆகிய 3 பிரச்சினைகளை முன் வைத்து தர்ணா நடத்தப்படும்.
மாநிலத்தில் 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் சமாஜ்வாதி கட்சி முன்னேற்றம் என்ற பெயரில் திட் டங்களை அறிவிப்பதோடு நின்று விடுகிறது.
போராட்டத்தின் 2-வது கட்டம், மத்திய அரசு நில மசோதா உள்ளிட்ட முக்கிய பிரச்சினை களில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை அனுசரித்து மேற்கொள்ளப்படும்.
போராட்டத்தை வெற்றி கரமாக நடத்துவது குறித்து தொண் டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். எனது அரசு கொண்டு வந்த சில கொள்கை களை நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ல், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இணைத்துள்ளது.
எனது தலைமையில் ஆட்சி நடந்தபோது முற்போக்கு ரீதியில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்த கையேடு அச்சடித்து தரப்படும்.
விவசாயிகள் நலன்பற்றி அக்கறையில்லாத பாஜக கூட்டணி அரசு தாம் கொண்டுவந்த திருத் தங்களில் விவசாயிகளின் நலன் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி நீதி பெற வேண்டிய நிர்பந்தம் ஏற் பட்டுள்ளது.
மனதிலிருந்து பேசுகிறேன் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சு நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து ஒருசார்புடையதாக இருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் எதிர் பாராத கனமழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. விவசாயிகளின் வங்கி மற்றும் இதர கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயி களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் இனம், சாதி சார்ந்த உணர்வுகளுடன் செயல்படக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.