

மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மத்தியில் பாஜகவுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸிற் கும் கிடைத்துள்ள அமோக வெற்றி குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சியினர் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திவரும் தாக்குதலுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்தும், படுதோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மூத்த தலைவர்கள் பிமன் பாசு, பினரயி விஜயன், மாணிக் சர்க்கார், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரகாஷ் காரத் கூறும்போது, “கட்சியை பலப்படுத்தும் நடவடிக் கைகள் குறித்து வரும் ஜூன் 7, 8 தேதிகளில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.
மார்க்சிஸ்ட், இத்தேர்தலில் 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.