

பிரதமர் பதவியை நரேந்திர மோடி இன்று ஏற்கவுள்ள நிலையில் டெல்லியில் உள்ள ராஜ்காத்தில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
நாட்டின் 16 வது மக்களவை அமைய போகும் நிலையில், பிரதமராக இன்று மாலை பதவியேற்கிறார்.
இதில் அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தலைநகரில் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காத்தில், பிரதமர் பதவியை ஏற்க உள்ள நரேந்திர மோடி இன்று காலை சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது காந்தியின் நினைவிடத்தில் சுமார் 10 நிமிடங்கள், மோடி பிரார்த்தனை செய்தார். அவருடன் விஜய் கோயல், ஹர்ஷ வர்தன் உட்பட பல பாஜக தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் பாஜக மூத்த தலைவர் வாஜ்பாயை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த மோடி, அவரிடம் ஆசி பெற்றார்.