

பிஹார் காவல் துறைக்கு 11,783 காவலர்களை தேர்வு செய்யும் நடைமுறையை அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் உடல் தகுதித் தேர் வுக்கு முன்பாக, சுமார் 52 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். அப்போது உடல் தகுதித் தேர்வுக்காக விண் ணப்பதாரர்கள் தரப்பில் ஆட்களை வாடகைக்கு அமர்த்தியது தெரிய வந்தது. விண்ணப்பதாரர்களுக்கு பதிலாக ஆஜரான சுமார் 2 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.