

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக் கின் இறுதி விசாரணை இன்றுமுதல் தொடங்குகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வருகிறார். இந்த வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012 பிப்ரவரி 2-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 122 உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டி ருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 154 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்றுமுதல் தொடங்குகிறது.