

விவசாயிகள் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விவசாயி தற்கொலை செய்து கொள்வது மிகப்பெரிய துன்பியல் சம்பவம். விவசாயிகள் பிரச்சினை ஒரு கட்சியை மட்டும் சார்ந்தது அல்ல.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் வெளியில் இருக்கும் பிற கட்சிகளும் அரசியல் பேதங்களைக் கடந்து தங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி விவசாயிகள் பிரச்சினைக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக இன்று மக்களவையில் விவசாயி தற்கொலை குறித்து விளக்கமளித்த பிரதமர் நரேந்திர மோடியும், "வேளாண் சமூகத்தினர் பிரச்சினை பழையது, ஆழமானது. இப்பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டே தீர்வு காண வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
பிரதமர் கருத்தை பிரதிபலிப்பது போலவே மன்மோகன் சிங்கும் கருத்து தெரிவித்துள்ளார்.