மோடிக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பாராட்டு

மோடிக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பாராட்டு
Updated on
1 min read

பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள நரேந்திர மோடிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

அடுத்த முறையும் அவர் பிரதம ராக வர வேண்டும் என்று வாழ்த் தினர். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடந்தது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நரேந்திர மோடிக்கு மலர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த னர். அனைவரையும், பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் தற்காலிக தலைவராக பொறுப்பு ஏற்ற அத்வானி, கூட்டத் தைத் தொடங்கிவைத்தார். அப் போது, முக்கிய கூட்டணி கட்சி களின் பெருமையை எடுத்துக் கூறிய அத்வானி, அதன் தலைவர்களை உரையாற்றும்படி கேட்டுக்கொண் டார்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், “நாட்டின் நாட்குறிப் பில் மோடி பிரதமராக தேர்ந் தெடுக்கப்படும் இந்த நாளை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும். சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதாவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சி யாகும். அடுத்த முறையும் பிரதம ராக மோடியை தேர்ந்தெடுப்பதற்கு எங்களின் ஆதரவு தொடரும்” என்றார்.

உத்தவ் தாக்கரே

சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், “பல வருடங்களாகக் கண்ட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பாஜகவின் கூட்டணியில் 25 ஆண்டுகளாக இருக்கிறோம். பெரும்பாலான ஆண்டுகள் போராட்ட அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வந்தோம். எனது தந்தை பால் தாக்கரே இப்போது உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். நம் நாட்டிற்கு துவங்கி விட்ட நல்ல காலத்தின் முதல் நாள் இது. மோடி தொடர்ந்து பிரதமராக இருக்க எங்கள் ஆதரவு என்றும் உண்டு” என்றார்.

ராம்விலாஸ் பாஸ்வான்

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான் கூறுகையில், “மோடியை பிரதமராக முன்னிறுத்தியதால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது ஒன்றும் சாதாரண வெற்றி அல்ல. முட்கள் நிறைந்த கிரீடம் இது. மக்கள் மலர்மாலைகளாக அளித்தாலும் அதை முட்கள் நிறைந்த கிரீடமாக ஏற்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நாட்டின் 84 தனித் தொகுதிகளில் 62-ல் பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. தலித்து கள் பெயரில் அரசியல் நடத்தும் தலைவர்களின் முகத்திரை கிழிந்து விட்டது. அடுத்து வரும் காலங் களிலும் மோடியே பிரதமராக இருக்க வேண்டும்” என்றார்.

நெய்பியூ ரியோ

நாகா மக்கள் முன்னணியின் தலைவர் நெய்பியூ ரியோ பேசுகையில், ‘நாடு இனி வடகிழக்குப் பகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in