Published : 04 Apr 2015 10:06 AM
Last Updated : 04 Apr 2015 10:06 AM
குளிர்பானங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் மிகப் பெரிய உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள இந்த ஆலையின் முதல் கட்ட செயல்பாடு நேற்று தொடங்கியது.
இந்த ஆலையில் பெப்சி தயாரிப்புகள், பழச்சாறு அடிப் படையிலான குளிர்பானங்கள், விளையாட்டு வீரர்களுக்கான பானங்கள் ஆகியன தயாரிக்கப் படும். இந்த ஆலை முழுவதுமாக செயல்படத் தொடங்கும்போது இங்கிருந்து 9 விதமான குளிர்பானங்கள் வெளியாகும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமது நிறுவனத் துக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஆலை செயல்படும் என்று இந்திரா நூயி தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெப்சியின் பங்களிப்பு கணிசமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் இந்த ஆலையில் பின்பற்றப்பட் டுள்ளதாக அவர் கூறினார். இந்த ஆலையில் உள்ள பணியாளர் களில் நான்கில் ஒரு பங்கு பெண் களாவர் என்றும் அவர் குறிப் பிட்டார். ஆலையை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி இந்த ஆலை யின் செயல்பாடு மூலம் தொடங்கு வதாக அவர் கூறினார். இந்த ஆலையின் மூலம் ஆயிரக்கணக் கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.