Published : 30 Apr 2015 08:06 AM
Last Updated : 30 Apr 2015 08:06 AM

தொழிலதிபர் நவீன் ஜிண்டால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

தொழிலதிபர் நவீன் ஜிண்டால் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஜார்க் கண்ட் மாநிலத்தில் சுரங்கம் ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் ஜிண்டால் உள்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள நீதிமன் றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களில் முன்னாள் மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவும் ஒருவராவார்.

இவர்கள் இருவர் தவிர ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜிண்டால் வீடு, ஜிண்டால் உருக்கு ஆலை மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களில் சிபிஐ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1993-ம் ஆண்டிலிருந்து அடுத் தடுத்து வந்த அரசுகளால் 200 நிலக்கரி சுரங்கங்கள் வெவ் வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப் பட்டன. இந்த ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடைபெற் றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவற் றுக்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் சுரங்க ஏலத்தை வெளிப் படைத் தன்மையுடன் நேர்மையாக நடத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இவற்றில் சில சமீபத்தில் ஏலம் விடப்பட்டன.

நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கப்படாத அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக 2012-ம் ஆண்டு சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவானது. இதைத் தொடர்ந்து விசாரணையை சிபிஐ தொடங்கியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன அதிபர்கள் ஆகியோரிடையே ரகசிய ஒப்பந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x