ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 17 ஆண்டுகள் இழுபறிக்கு மோடி தீர்வு: பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 17 ஆண்டுகள் இழுபறிக்கு மோடி தீர்வு: பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு
Updated on
1 min read

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நிலைக்கு பிரதமர் மோடி தீர்வு கண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் 36 ரஃபேல் போர் விமானங்களும் விமானப் படைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்க முடிவு செய்துள்ள ரஃபேல் போர் விமானங்கள், மிகவும் நவீனத்துவமான திறன் வாய்ந்தவை. போர் திறனும் வாய்ந்தவை.

பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது. | விவரம்: |

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறும்போது, "ரஃபேல் ரக விமானத்தை வாங்கும் முடிவை எடுத்தது மத்திய அரசின் மிகச் சிறந்த முடிவு. 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரதமர் தீர்வு கண்டுள்ளார்.

தற்போதைய நிலையில் விமானப்படைக்கு வலுசேர்க்கவும், நிலையை மாற்றவும் ரஃபேல் விமான கொள்முதல் ஏதுவாக அமையும்.

36 ரஃபேல் விமானங்களும் விமானப் படைக்கு அடுத்த 2 ஆண்டுகளில் அர்ப்பணிக்கப்படும்" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in