Last Updated : 05 Apr, 2015 11:45 AM

 

Published : 05 Apr 2015 11:45 AM
Last Updated : 05 Apr 2015 11:45 AM

ஏமனில் இருந்து 664 இந்தியர்கள் நாடு திரும்பினர்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட் டுள்ள ஏமனில் இருந்து வெளி யேற்றப்பட்ட 664 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினர்.

இதன் மூலம் ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களின் எண் ணிக்கை 1022 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய விமானப் படையின் 2 விமானங்கள் மூலம் 334 பேர் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியள வில் மும்பை வந்து சேர்ந்தனர். ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 330 இந்தியர்கள் நள்ளிரவில் கொச்சி வந்து சேர்ந்தனர்.

ஏமன் தலைநகர் சனாவில் இருந்து ஜிபவுத்தி நாட்டுக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப் பட்ட இந்தியர்களில் இவர்கள் ஒரு பகுதியினர் ஆவர். கொச்சி விமான நிலையம் வந்துசேர்ந்தவர்களை அம்மாநில அமைச்சர் கே.சி.ஜோசப் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இங்கு வந்தவர் களில் 4 குழந்தைகள் உட்பட 130 மட்டுமே கேரளத்தைச் சேர்ந்தவர் கள். மற்றவர்கள் பிற மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கேரள அதிகாரி ஒருவர் கூறினார். இதுபோல் மும்பையில் வந்திறங்கிய கேரளத்தைச் சேர்ந்த 56 பேர், சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

இந்நிலையில் கொச்சி வந்திறங்கிய செவிலியர் ஒருவர் கூறும்போது, “ஏமன் நாட்டுக்கு சென்ற 8 ஆயிரம் இந்தியர் களில் 6 ஆயிரம் பேர் செவிலியர் கள். இதுவரை 2 ஆயிரம் பேர் மட்டுமே வெளியேற்றப்பட் டுள்ளனர். தலைநகர் சனாவில் மட்டும் 4 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்ப காத்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x