Published : 13 Apr 2015 07:24 AM
Last Updated : 13 Apr 2015 07:24 AM

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்: சத்தீஸ்கர் சுரங்கத்தில் 17 வாகனங்கள் எரிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் கன்கெர் மாவட்டத்தில் உள்ள இரும்பு சுரங்க வளாகத்துக்குள் நேற்று புகுந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 வாகனங்களை தீவைத்து கொளுத்தினர்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்குவங்கம், சத்தீஸ்கர், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிஸா, மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோ யிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம். அவர்களை ஒடுக்க சி.ஆர்.பி.எப். படை ஒருங்கிணைந்த நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்குப் பதிலடியாக மாவோ யிஸ்ட் தீவிரவாதிகள் தற்போது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், போலம்பள்ளி-பிட்மெல் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் 70 பேரை சுற்றிவளைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 போலீஸார் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத் தின் கன்கெர் மாவட்டம், பர்பாஸ்பூர் பகுதியில் உள்ள இரும்பு சுரங்க வளாகத்துக்குள் நேற்று ஏராளமான மாவோயிஸ்டுகள் புகுந்தனர். அவர் கள் அங்கிருந்த தொழிலாளர்களை அடித்து விரட்டினர். பின்னர் சுரங்க வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 17 கனரக வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மாநில அதிரடிப் படை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பியோடி மறைந்துவிட்டனர்.

இந்தத் தகவலை நிருபர்களிடம் கூறிய மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜிதேந்திர சிங் மீனா, மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது, உயிர்ச்சேதம் இல்லை என்று தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால் சத்தீஸ்கர் உட்பட தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த 10 மாநிலங்கள் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்களில் மாவோயிஸ்டு களை ஒடுக்க சி.ஆர்.பி.எப். படை யினரும் மாநில போலீஸாரும் இணைந்து பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். மத்திய உள் துறை அமைச்சகமும் சத்தீஸ்கர் உள் ளிட்ட மாநிலங்களின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

7 போலீஸார் உடல் மீட்பு

இதனிடையே சத்தீஸ்கரின் போலம்பள்ளி-பிட்மெல் பகுதியில் நேற்றுமுன்தினம் என்கவுன்ட்டரில் பலியான 7 போலீஸாரின் உடல்கள் அங்கேயே கிடந்தன. மோசமான வானிலை மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப் பகுதி என்பதால் உடல்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வீரர்களின் உடல்கள் நேற்று கன்கர்லென்கா என்ற இடத்துக்கு தூக்கி வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜக்தால்பூர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தத் தகவலை கூடுதல் டிஜிபி ஆர்.கே.விஜ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x