Last Updated : 17 May, 2014 09:11 AM

 

Published : 17 May 2014 09:11 AM
Last Updated : 17 May 2014 09:11 AM

தலைநகரில் உற்சாகம், சோகம், சோதனை!

திருவிழாவுக்கான எல்லா அம்சங் களையும் அணிந்துகொண்டிருக் கிறது அசோகா சாலை. அடர்ந்த மரங்கள் நிறைந்த விசாலமான தெருவுக்குள் நேற்று எந்த வாகன மும் அனுமதிக்கப்படவில்லை. எப் போது வேண்டுமானாலும் முடி சூட வரும் மன்னனுக்காக காத்திருக் கின்றன அலங்கரிக்கப்பட்ட யானை கள். தும்பிக்கைகளில் தாமரையின் சின்னத்தை ஏந்தியிருக்கும் யானை களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் நாட்டின் பல மூலைகளிலிருந்து வந்தபடியிருக்கும் பா.ஜ.கவினர். தில்லியின் கடுமையான வெய்யிலையும் பொருட்படுத்தாது வெற்றியை கொண்டாட குவிந்துக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க. தொண் டர்கள். ஒரு பக்கம் பானி பூரி, மாங் காய் சுண்டல், இளநீர் என்று திடீர் கடைகளும் மறுபுறம் மயிலாட்டம், புலியாட்டம், பாரம்பரிய நடனங்கள், தாரை தம்பட்டை என்று கொண்டாட்டங்களுமாக இணைந்து அசோகா சாலையில் ஒரு திருவிழாவை நிகழ்த்திக்கொண்டிருந்தன. வெடிகள், லட்டுகள் என்று கூடுதல் களேபரங்களும் அரங்கேறிக்கொண்டிருந்தன. கட்சி அலுவலகத்தின் வாயிலிலேயே ஒரு பெரிய மின்திரையில் தேர்தல் முடிவுகள் மின்னிக்கொண்டிருக்க, அதை பார்த்த உற்சாகத்தில் திடீர் திடீரென்று ஆடல் பாடல்களில் மூழ்கினார்கள் கூடியிருந்தவர்கள். காவி வர்ணத்தை ஒருவருக்கொருவர் முகங்களில் பூசி திடீர் ஹோலியையும் கொண்டாடினார்கள். மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவென்று வைக்கப் பட்டிருந்த போர்ட்டில் நூற்றுக்கணக் கான பேர் உற்சாகத்தோடு கையெழுத்து இட்டுக்கொண்டிருந்தார்கள்

“நாங்கள் உண்மையாகவே தேசத்தை மாற்றிவிட்டோம்” என்று அணிந்திருந்த டிசர்ட் வாசகத்தை காட்டி பெருமிதப்பட்டுக்கொண்டார் ஒரு இளைஞர். “நான் உத்திர பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறேன். பா.ஜ.க வெற்றி பெறும் என்று தெரியும் கொண்டாட்டங்களில் பங்கு பெறவே வந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று தெரியாது. விடிய விடிய கொண்டாடப் போகிறோம்” என்றார் சுமன் என்கிற இளைஞர்.

கொண்டாட்டங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் அசோகா சாலையி லிருந்து அதிக தொலைவில் இல்லை, அக்பர் சாலை. ஆனால் அங்கு கொண்ட்டாட்டங்களின் நிழல் கூட படியவில்லை. வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருக்கும் காங்கிரசின் அலுவலகம் அக்பர் சாலையில்தான் இருக்கிறது. வெறிச்சோடியிருந்த அலுவலகத்தில் பத்திரிக்கை யாளர்கள் மட்டுமே அதிக அளவில் குழுமியிருந்தார்கள். பல தலைவர்களின் பெயர்ப்பலகைகளை தாங்கியிருந்த கதவுகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டே இருந்தன. “காங்கி ரஸ் பல தவறுகளை செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்திருக் கிறது. அவ்வளவுதான். இனி நாங்கள் எங்களை உள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை தலைவர்கள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று சொன்னார் அங்கு கூடியிருந்த மிகச்சில தொண்டர்களில் ஒருவர். .

காங்கிரஸை போலவோ பா.ஜ.க போலவோ அல்லாமல் ஒரு மோன நிலையில் இருந்த்து கன்னாட் பிளேசின் பின்புறம் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம். குழுமியிருந்த தொண்டர்களுக்கிடையில் உற்சாகமும் இல்லை, சோகமும் இல்லை.

“பா.ஜ.க இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் ஆம் ஆத்மி நாங்கள் எதிர்பார்த்ததுதான். எங்களுடையது புதிய கட்சி. இழப்பதற்கு எதுவும் இல்லை என்கிற நிலையிலேயே நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இனி கூடுதல் உழைப்பை செலுத்துவோம்” என்று நம்பிக்கை தொனிக்க சொன்னார் ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். தில்லியில் எடுத்த அவசர முடிவு இந்த தேர்தலில் எதிரொலித்ததாக பல ஆம் ஆத்மி தொண்டர்கள் நினைத்ததை புரிந்து கொள்ள முடிந்த்து.

‘ஒரு நமோ டீ குடிக்கலாம் வாப்பா’ என்கிற அக்பர் சாலை பரபரப்புகளை தாண்டி வந்தால் கொண்டாட்டங்களின் சுவடுகள் எதுவும் இன்றி தில்லி வழக்கமாகவே இயங்கிக்கொண்டிருந்தது. நடந்து முடிந்த தேசிய திருவிழாவின் மீது திரைச்சீலையை மெல்ல இழுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள் டெல்லி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x