Published : 22 Apr 2015 10:14 AM
Last Updated : 22 Apr 2015 10:14 AM

குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அரசு மருத்துவமனைகளில் வசதி செய்து தரக்கோரிய வழக்கு - அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

அனைத்து அரசு மருத்துவமனை களிலும் போதிய வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தருமபுரி யைச் சேர்ந்த ஆர்.ஜானகிராமன் தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 11 குழந்தை கள் உயிரிழந்தன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததே குழந்தைகள் இறப்புக்கு காரண மாகும். அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகள், குறைப்பிரசவம், நுரையீரலில் கிருமித் தொற்று போன்றவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் இல்லாததால் குழந்தைகள் இறந்துள்ளன.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளுக் கும் அனைத்து வசதிகளும், போதிய உபகரணங்களும் வழங்க வும், காலியாகவுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் டாக்டர் பணியிடங்களை நிரப்பவும், தரும புரியில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட் டுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ் வழக்கை விசாரித்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட் டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x