Last Updated : 06 Apr, 2015 11:14 AM

 

Published : 06 Apr 2015 11:14 AM
Last Updated : 06 Apr 2015 11:14 AM

ராகுல் பாதுகாப்பாக இருக்கிறார்: சல்மான் குர்ஷித் விளக்கம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாகவே இருக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. அவர் கட்சிப் பணிகளில் இருந்து சிறிய விடுப்பு எடுத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், ராகுல் காந்தி எங்கு போனார், என்ன செய்கிறார் என்பது குறித்த கேள்விகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், "ராகுல் காந்தி எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாகவே இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.

ராகுல் காந்தி விரைவில் திரும்பி வருவார். ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் கமாண்டர். அவரது திரும்புதலை உலகமே கூர்ந்து கவனிக்கும். ஏனெனில் அவர் சிறப்பான சாதனை படைத்து திரும்புவார்" என கூறியுள்ளார்.

பிரியங்காவுக்கு தலைவர் பதவி?

ராகுல் காந்தி சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்த கேள்விக்கு, "பிரியங்கா காந்தியை தலைவராக்குவதா வேண்டாமா என்பதை கட்சி மேலிடமே முடிவு செய்யும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x