Last Updated : 23 Apr, 2015 08:43 AM

 

Published : 23 Apr 2015 08:43 AM
Last Updated : 23 Apr 2015 08:43 AM

காஷ்மீர் வரைபடத்தை தவறாக காட்டியதால் அல் ஜஸீரா சேனலுக்கு 5 நாள் தடை

தவறான வரைபடங்களைக் காட்டி யதால், இந்தியாவில் `அல் ஜஸீரா' சேனல் ஒளிபரப்பப்படுவதற்கு 5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அல் ஜஸீரா தொலைக்காட்சி, தவறான இந்திய வரைபடங்களை ஒளிபரப் பியதாக தகவல் மற்றும் ஒலிபரப் புத்துறை அமைச்சகம், `சர்வேயர் ஜெனரல் ஆஃப் இந்தியா'எனும் ஆணையகத்தின் கவனத் துக்குக் கொண்டு வந்தது.

அந்த‌க் காட்சிக‌ளை ஆராய்ந்த அந்த ஆணையகம், `இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகள் சிலவற்றை, அவை இந்தியாவில் இருப்பதாகக் காட்டப்படவில்லை. மேலும் லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் தீவுகளையும் அது காட்டவில்லை' என்று கூறியது.

மேலும் அது, `இவ்வாறு இந்திய‌ வ‌ரைப‌ட‌த்தைத் த‌வ‌றுத‌லா க‌க் காட்டுவ‌து, இந்த ஆணைய‌க‌ம் வெளியிட்டுள்ள‌ காப்புரிமை பெற்ற‌ வ‌ரைப‌ட‌த்துட‌ன் பொருந்தி வ‌ருவ‌ தாக‌ இல்லை. ஆக‌வே இது தேசிய‌ வ‌ரைப‌ட‌க் கொள்கைக்கும் எதிரான‌தாகும்' என்று கூறியுள்ள‌து.

இதைத் தொட‌ர்ந்து அந்த‌த் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் விட‌ப்ப‌ட்ட‌து. அத‌ற்குப் ப‌தில‌ளித் துள்ள‌ அந்த‌த் தொலைக்காட்சி, `குளோப‌ல் நியூஸ் புரொவைட‌ர்ஸ் எனும் அமைப்பு ப‌ய‌ன்ப‌டுத்தும் மென்பொருளைக் கொண்டுதான் அந்த‌ வ‌ரைப‌ட‌ங்க‌ள் உருவாக் க‌ப்ப‌ட்ட‌ன‌.

எனினும், இந்த‌ வ‌ரைபட‌ங்க‌ள் குறித்த‌ இந்திய‌ அர‌சின் க‌ருத்துக‌ளை நாங்க‌ள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும், ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பை ச‌மீப‌த்தில் வெளியிட்டுள்ள‌ அதி கார‌ப்பூர்வ‌மான‌ வ‌ரைப‌ட‌ங்க‌ ளுட‌ன் ஒப்பிட்டு இந்தியா ம‌ற்றும் பாகிஸ்தான் வ‌ரைப‌ட‌ங்க‌ளை நாங்க‌ள் மீளாய்வு செய்து பார்க்கிறோம்' என்று கூறியுள்ள‌து.

இவ்வாறு வ‌ரைப‌ட‌ங்க‌ளைத் த‌வ‌றாக‌ வெளியிட்ட‌து ம‌த்திய‌ த‌க‌வ‌ல் ம‌ற்றும் ஒலிப‌ர‌ப்புத்துறை அமைச்ச‌க‌ம் வ‌குத்துள்ள‌ விதிக‌ள் மீற‌ப்ப‌ட்டுள்ள‌தையே காட்டுகின்ற‌ன‌.

என‌வே, இந்தியாவில் ஏப்ர‌ல் 22 முத‌ல் 27ம் தேதி வ‌ரை அந்த‌த் தொலைக்காட்சி த‌ன‌து ஒளிப‌ர‌ப்பை வ‌ழ‌ங்க‌ த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்று ம‌த்திய‌ அமைச்ச‌க‌ வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x