இடைத் தேர்தல்: 2 மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வெற்றி

இடைத் தேர்தல்: 2 மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வெற்றி
Updated on
1 min read

சட்டசபை இடைத் தேர்தல் நடை பெற்ற பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் முறையே ஆளும் கட்சிகளான சிரோன்மணி அகாலி தளம், காங்கிரஸ் ஆகியவை வெற்றி பெற்றன.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயண் ரானே தோல் வியைத் தழுவினார். நாராயண் ரானே 6 மாதத்தில் 2-வது முறை யாக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். மும்பை பாந்த்ரா கிழக்கு தொகுதியில் சிவசேனை பெண் வேட்பாளர் திருப்தி சாவந்த், ரானேவை தோற் கடித்தார். திருப்தி சாவந்தின் கணவர் பாலா சாவந்த் எம்.எல்.ஏ. மரணமடைந்ததால் இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் இடைத் தேர்தல் நடைபெற்ற மற்றொரு தொகுதியான டஸ்கோன்-கவ்தே மஹங்கல் தொகுதியை தேசிய வாத காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது. அக்கட்சி வேட்பாள ரான சுமன் பாட்டீல் 1.12 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பெரிய கட்சிகள் எதுவும் வேட் பாளரை நிறுத்தவில்லை.

பஞ்சாபில் தூரி தொகுதியை காங்கிரஸிடம் இருந்து ஆளும் கட்சியான சிரோன்மணி அகாலி தளம் கைப்பற்றியுள்ளது. உத்தரா கண்ட் மாநிலம் பகவான்பூர் தொகு தியில் நடைபெற்ற இடைத் தேர்த லில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியிடம் இருந்து அத்தொகுதியை கைப்பற்றி காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in