Published : 23 Apr 2015 04:24 PM
Last Updated : 23 Apr 2015 04:24 PM

நீரிழிவு, உடற்பருமனை கட்டுப்படுத்தும் குடைமிளகாய்

நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயை அடையாளம் கண்டுள்ளது புதிய ஆய்வு ஒன்று.

வாழ்க்கை முறை காரணிகளால் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்வது ‘நீரிழிவுடற்பருமன்’(Diabesity). இந்த புதிய ஆய்வில் உணவுப் பழக்கமுறைகளினால் உடற்பருமன், நீரிழிவு நோய்களை திறம்பட நிர்வகிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது .

சி.எஸ்.ஐ.ஆர்.-ல் உள்ள ஆய்வாளர்கள் பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதில் அதி நீரிழிவு மற்றும் அதி உடற்பருமனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

பொதுவாக குடல்சுவரில் காணப்படும் ஆல்பா-குளூக்கோசிடேஸ் என்ற சுரப்பியே கார்போஹைட்ரேட்டுகளை குளூக்கோஸாக மாற்றுகிறது. அதே போல் கணையத்தில் உள்ள சுரப்பி ஒன்று கொழுப்பை உடற்பருமனுக்குக் காரணமாகும் அமிலமாக மாற்றுகிறது.

இந்த ஆய்வில், மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய்கள் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் லிபிட்களின் சீரணத்தை மெதுவாக்குக்கிறது.

பச்சைக் குடைமிளகாயைக் காட்டிலும் சர்க்கரை நோய் மற்றும், உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமாகும் 2 சுரப்பிகளை ஓரளவுக்கு மஞ்சள் குடைமிளகாய் கட்டுப்படுத்துகிறது. பச்சைக் குடைமிளகாயைக் காட்டிலும் மஞ்சள் குடைமிளகாய் இரட்டிப்புடன் வேலை செய்கிறது என்று முன்னணி ஆய்வாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி தெரிவித்தார்.

கார்போஹைட்ரேட்கள் மற்றும் லிபிட்களின் சீரண சக்தியை ஓரளவுக்கு தாமதப்படுத்துவதன் மூலம் குளூக்கோஸ் சேர்மானத்தை தடுக்க முடிகிறது என்கிறது இந்த ஆய்வு.

பச்சை குடைமிளகாயை விட மஞ்சள் குடைமிளகாய் சிறந்த தெரிவு என்கிறார் அசோக் குமார் திவாரி. சிகப்புக் குடைமிளகாய் கொழுப்புச் சத்துகள் உடற்பருமன் கூறுகளாக மாறுவதை நன்றாகத் தடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் நீரிழிவைப் பொறுத்தவரை சிகப்பு குடைமிளகாயின் விளைவும், பச்சைக் குடைமிளகாயின் விளைவும் ஏறக்குறைய ஒன்றுதான் என்கிறார் டாக்டர் அசோக் குமார் திவாரி.

மேலும் ஃப்ரீ ரேடிகல் என்று அழைக்கப்படும் நிலையற்ற பிராணவாயு மூலக்கூறுகள் வாழும் செல்களை சேதப்படுத்தக்கூடியது. இதனால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகிறது. இதன் தீவினைகளைத் தடுக்கும் anti-oxidant-களாக மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய் பயன்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x