

லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்படவுள்ளது. இவ்விழாவில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்கவுள்ளார்.
இதுதொடர்பாக, பிரிட்டன் கலாச் சாரம், ஊடகம் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில், “வரும் சனிக்கிழமை காந்தி சிலை திறப்பு விழாவில் அமிதாப் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என ட்விட்டரில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்தப் பதிவை, அமிதாப் மறுபதிவு செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பிய 100-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட வெண்கலத்தா லான காந்தி சிலையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி திறந்து வைக்கவுள்ளார்.