

‘உலகின் வேறு எந்த நாட்டையும் விட, இந்தியாவில்தான் முஸ்லிம் கள் பாதுகாப்பாக உள்ளனர்’’ என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்த இந்துக்கள் மாநாட்டில், யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘‘இந்துக்களுக்கு இயல்பாகவே பரந்த மனப்பான்மை உண்டு. எனவே, இந்த நாடும் அப்படியே உள்ளது. உலகின் வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்’’ என்றார்.
‘அன்னை தெரசா மதப் பிரசாரகர். மக்களை மதமாற்றம் செய்யவே வந்தார்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த யோகி, ‘‘ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் மதமாற்றம் செய்வது தவறானது. விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவை, கர்நாடகத்துக்குள் நுழையவிடாமல் காங்கிரஸ் அரசு தடுத்தது மிகப் பெரிய தவறு’’ என்றார்.