Published : 08 Mar 2015 11:02 AM
Last Updated : 08 Mar 2015 11:02 AM

காஷ்மீரில் பாஜக கூட்டணி நாட்டுக்கு கேடு: சிவசேனா கடும் தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக்கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் பாஜக, நாட்டுக்கு பிரச்சினையை ஏற்படுத் தியுள்ளது என சிவசேனா விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் இதழான சாம்னா தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீர் அரசில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பிடிபி) இணைந்து பங்கேற்பது என பாஜக எடுத்த முடிவால், அதன் விரல்கள் எரியலாம். அதுமட்டுமல்லாமல் இந்தக் கூட்டணி இந்தியாவை பிரச் சினைகளுக்குள்ளும் அழைத்துச் செல்கிறது என்பதற்கான அறிகுறிகளை நாம் பார்க்க முடிகிறது.

பிரிவினைவாதிகள், பாகிஸ் தானை பாராட்டியுள்ள முப்தி முகமது சயீத்துக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் தீர்மானம் கொண்டு வர வேண்டும். தூக்கி லிடப்பட்ட தீவிரவாதி அப்ஸல் குருவின் உடலின் எச்சங்களை காஷ்மீருக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் என சயீத் அரசாங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. அவரது முந்தைய கருத் தால் ஏற்பட்ட சர்ச்சை ஓய்வதற்கு முன்பாகவே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 40-50 ஆண்டுகளில் காஷ்மீரை தனியாக பிரிப்பதற்குக் கிடைத்த எந்தவொரு சிறிய வாய்ப்பையும் சயீத் தவற விடவில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுவிக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவித்தனர். பின்னர்தான், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தனது சொந்த மகளை கடத்துவதற்கு அவர் உடன்பட்டார் என்பது தெரியவந்தது.

சயீத் தனது உளறல்களைத் தொடர்ந்தால், அதற்கு இந்தியா மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும். சயீதின் பேச்சுகளில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்பது நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x