கண் அறுவை சிகிச்சையில் 19 பேர் பார்வையிழப்பு

கண் அறுவை சிகிச்சையில் 19 பேர் பார்வையிழப்பு
Updated on
1 min read

ஹரியாணா மாநிலம், பானிபட் நகரில் ‘நவஜீவன் மெடிகேர்’ என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு பானிபட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, கண்ணில் வளர்ந்துள்ள சதையை அகற்றும் கேடராக்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்கூர் குப்தா என்ற மருத்துவர் கடந்த 11-ம் தேதி இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்நிலையில் நோய்த் தொற்று காரணமாக 19 பேருக்கு பார்வை பறிபோனது.

இவர்களில் 14 பேர் சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு பானிபட் நகர மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு, பானிபட் மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த அனில் விஜ், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 37 பேர் பார்வை இழந்தனர். அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட 3 மருந்துகளில் ஒன்று, நோய்த் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என்று பின்னர் கூறப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in