இந்தியா
ஆந்திர ஆளுநர் நரசிம்மனுக்கு உடல் நலம் பாதிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆந்திர ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பொது ஆளுநராக உள்ள ஈ.எஸ்.எல். நரசிம்மன், 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்றுமுன்தினம் இரவு திருப்பதி வந்தார். இவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் 4 நாள் தேசிய வேத கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இவருக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அவர் நேற்று ரேணிகுண்டாவிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
