லஷ்கர் தீவிரவாதி துண்டா விடுவிப்பு

லஷ்கர் தீவிரவாதி துண்டா விடுவிப்பு
Updated on
1 min read

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அப்துல் கரீம் துண்டாவை வெடிகுண்டு வழக்கு ஒன்றில் இருந்து டெல்லி நீதிமன்றம் நேற்று விடுவித்தது.

அவர் மீது மேலும் பல தீவிரவாத வழக்குகள் உள்ளதால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்திய நேபாள எல்லையில் துண்டா கைது செய்யப்பட்டார். அவருக்கு இப்போது 73 வயதாகிறது.

இந்தியாவில் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற சுமார் 40 குண்டு வெடிப்பு சம்பவங்களில் துண்டாவுக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கில் போதுமான ஆதாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி டெல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in