

நாகாலாந்து புதிய முதல்வராக பதவியேற்றுள்ள டி.ஆர்.ஜெய்லாங்கிற்கு, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி.
ஜெய்லாங்கின், நாகா மக்கள் முன்னணி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டதால் நாகாலாந்து முதல்வராக இருந்த நெபியு ரியோ நேற்று (வெள்ளிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக டி.ஆர். ஜெலியாங் இன்று பதவியேற்றுக் கொண்டார். டி.ஆர். ஜெலியாங்குடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.