

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபோல காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான தேசிய மாணவர் கூட்டமைப்பும் (என்எஸ்யுஐ) அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சரத் பவார் தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு நேற்று மன்மோகன் சிங்கை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியது. இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் மற்றும் மக்களவை உறுப்பினரும் சரத் பவார் மகளு மான சுப்ரியா சுலே உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்ற விவ காரத்தில் மன்மோகன் சிங் எடுக்கும் எத்தகைய நடவடிக் கைக்கும் எங்கள் கட்சி ஆதரவாக இருக்கும். அதேநேரம் நீதிமன்றத் தின் முடிவை மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் உண்மையை மேல் நீதிமன்றத்தில் எடுத்துரைக்க அவருக்கு உரிமை உள்ளது. அவரது நேர்மையை உலகமே அறியும்” என்றார்.
மன்மோகன் சிங் அரசில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் கூறும்போது "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப் பது அரசு நிர்வாகத்தின் மீதான கரும்புள்ளி ஆகும். இதன்மூலம் முடிவுகளை எடுக்க அரசு அதிகாரி கள் தயங்குவார்கள்” என்றார்.
சுப்ரியா சுலே ட்விட்டரில், “நேர் மையின் சின்னமாக விளங்கும் மன்மோகன் சிங்குக்கு எங்களது மனப்பூர்வ ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மன்மோகனுக்கு சட்ட ரீதியாக உதவ தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவும் தயாராக உள்ளது என அவரிடம் தெரிவித்துள்ளனர்.
தேசிய மாணவர் கூட்டமைப்பு
தேசிய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் ரோஜி எம்.ஜான் தலைமையிலான குழுவினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் ஜான் செய்தியாளர்களிடம் கூறும் போது, “நேர்மை மற்றும் ஒருமைப் பாட்டு குணம் காரணமாக மன்மோகன் சிங் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறார். நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் அவர் மீது தவறுதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்ற மற்றவர் என்பதை நிரூபித்து இந்த வழக்கிலிருந்து அவர் விடுபடுவார் என்று நம்புகிறோம். இந்த விவ காரத்தில் அவருக்கு உறுதுணை யாக இருப்போம். நிதியமைச்சர், பிரதமர் உள்ளிட்ட பதவிகளின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளை எதிர்கால சந்ததியினர் நினைவுகூர்வார்கள்” என்றார்.