

கொல்கத்தா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான இரண்டு சிற்பங்கள் சேதமடைந்ததை பற்றி ஏஎஸ்ஐ மத்திய அரசுக்கு புகார் தெரிவித்துள்ளது.
இந்திய அருங்காட்சியகத்தில் சரிசெய்ய இயலாத வகையில் உள்ள, சேதமடைந்த இரண்டு சிறந்த இந்திய சிற்பங்கள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு எழுதியுள்ளது.
கி.மு.2 மற்றும் 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான விலைமதிப்பற்ற தொல்பொருள்கள் சேதமடைவதைப் பார்த்து யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு தொடரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது.
ஒரு சில வாரங்களுக்கு முன்புதான், கி.மு.2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த யக்ஷி உருவத்தின் வலது கால் சேதமுற்றது கவனிக்கப்பட்டது. தனித்துவமிக்க மயூரன் சிற்பங்களின் வகைமாதிரியான ''ராம்பூர்வா சிங்கம்'' சிற்பத்தின் மார்பகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளின் சிதறல்கள் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டன. தி இந்து(ஆங்கிலம்) நடத்திய இரு ஆய்வுகளின்படி, இவை தவறுதலாகக் கையாளும்போது உடைகின்றன என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டன.
சிற்பத்தின் வலதுகால் மேல் பகுதியில் கணுக்காலின் அருகே ஏற்பட்டுள்ள சேதாரம் திட்டவட்டமானதுதான் என்பது அருங்காட்சியக ஊழியர்களின் கருத்து. என்றபோதிலும் செதிள்போல உதிர்ந்ததை வைத்து அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர், ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
''சிற்பங்களின் சேதாரம் குறித்த வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி அந்தப் பள்ளம் மிகவும் ஆழமானதும் மற்றும் சிராய்ப்பையும் கொண்டுள்ளது. இச்சூழ்நிலையில் குற்றச்சாட்டு நியாயமானதுதான்' என விசாரணையில் கூறப்பட்டது.
'ராம்பூர்வா சிங்கச்' சிற்பத்தின் சேதாரத்தை 1907-08ல் வெளிப்படுத்திய தொல்பொருள்ஆய்வாளர் தயாராம் சாஹ்னி, நிச்சயமாக இடமாற்றம் செய்யும்போது நிகழ்ந்த தவறுதல்தான இதற்குக் காரணம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். நிபுணர்கள் தயாரித்த அறிக்கையின்படி இந்த கனமான சிற்பம் இரு துண்டுகளாக ஆனது என்பது முன்பே நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கைகளின் நகல்கள் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சேதாரம் குறித்து சுனில் குமார் உபாத்யாயா குடும்பத்தினர் ஒருமுறை உச்சநீதிமன்றத்தில் செய்த மனுதாக்கல் விசாரணைக்கு வந்தபோதுதான் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
அருங்காட்சியக கலைப்பொருட்கள் பாதுகாப்பு அதிகாரி ஜூலை 3, 2014 அன்று நகரத்தில் உள்ள தனது வாடகை வீட்டிலிருந்து மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார். அதன்பின்னர் இன்றுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.