

கோவா மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை ஊழியர்கள், கை இல்லாத சட்டை, பல பாக்கெட் கொண்ட பேன்ட், ஜீன்ஸ், டீ ஷர்ட் ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கோவா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் தயானந்த் மந்த்ரேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் பிரசாத் லோலயேகர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “ஊழியர் கள் அலுவலகத்துக்கு சாதாரண உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று மீண்டும் அறுவுறுத்தப்படுகிறது. ஜீன்ஸ், டீ ஷர்ட், பல பாக்கெட் கொண்ட பேன்ட், கை இல்லாத சட்டை ஆகிய வற்றை அணிந்து வரக்கூடாது. அலுவல் ரீதியிலான நிகழ்ச்சி களுக்கும் இத்தகைய உடைகளை அணியக் கூடாது” என கூறப் பட்டுள்ளது.