

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனிதர்கள் அல்ல. இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ரனாகாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாஸ்திரியை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர், கன்னியாஸ்திரி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மேற்குவங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.