

மத்திய அரசு இதுவரை செயல்படுத்தி வந்த 8 திட்டங்களுக்கு தனது ஆதரவை விலக்கிக் கொள்கிறது என்று பட்ஜெட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-16ம் நிதி ஆண்டில் மத்திய அரசு திட்ட ஒதுக்கீடாக பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 14வது நிதி குழுவின் பரிந்துரைப்படி 42 சதவீதம் மத்திய அரசு அதன் வரியிலிருந்து மாநிலங்களுக்கு அளித்துள்ளது. இதை தொடர்ந்து மாநிலங்களில் செயல்படுத்தப்படும் 8 திட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
2015-16ம் பட்ஜெட்டின்படி, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மாநில அரசு தனது பங்கை அதிக அளவு நிதி செலவிடும் வகையில் மாற்றி அமைக்கப்படும். மத்திய மாநில அரசின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பின்னர் கணக்கிடப் படும்.
இந்த பட்ஜெட்டில் 31 திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கும். 8 திட்டங்களுக்கான நிதி ஆதாரம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. நிதி பங்களிப்பு விகித மாற்று திட்டத்தின் கீழ் 24 திட்டங்கள், தற்போது செயல்படுத்தப்படும். இதற்காக 2014-15ம் ஆண்டில் மறு மதிப்பீடாக ரூ.1,92,378 கோடி மூலதன செலவு செய்யப்பட்டது. இது 2015-16ம் ஆண்டில் ரூ.2,41,431 கோடியாக இருக்கும்.
(அ) மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
2. சிறுபான்மையினருக்கான பல்முனை வளர்ச்சி திட்டம்
3. தூய்மையில்லா பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களுக்கு கல்வி முன் உதவி தொகை
4. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவருக்கு கல்வி உதவி தொகை
5. 1995 குடியுரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் 1989 வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமலாக்க தேவையான ஆதரவு அளித்தல்
6. மாற்று திறனாளிகளுக்கான தேசிய திட்டம்
7. சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் திட்டம்
8. பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் திட்டம்
9. இந்திரா காந்தி மகப்பேறு உதவித் திட்டம்
10. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
11. ராஜீவ் காந்தி - இளம் பெண்களுக்கான அதிகாரம் அளிக்கும் திட்டம்
12. தேசிய ஊட்டச்சத்து இயக்கம்
13. பெண்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டம்
14. அரசியல் சட்டமைப்பு பிரிவு 275 திட்டத்திற்கான உதவித் திட்டம்
15. மத்திய பழங்குடியின மக்களுக்கான சிறப்பு துணைத் திட்டம்
16. அனைவருக்கும் கல்வி திட்டம்
17. மத்திய உணவுத் திட்டம்
18. வடகிழக்கு குழுவுக்கான திட்டம்
19. போடோ பிரதேச குழுவிற்கான சிறப்பு திட்டங்கள்
20. தேசிய சமூக உதவித் திட்டம் (அன்னபூர்னா)
21. வடகிழக்கு மண்டலத்திற்கும் சிக்கிமுக்குமான மத்திய வளங்கள் மையத்திலிருந்து நிதி
22. வரைமுறை படுத்தப்படாத துறையின் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம்
23. (ஆசிரியர் பயிற்சி மற்றும் முதியோர்) கல்வி வளர்ச்சிக்கான உதவி
24. எல்லை பகுதி வளர்ச்சி திட்டம்
25. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் வளர்ச்சிக்கான திட்டம்
26. பிரதமர் கிராம சாலைகள் திட்டத்திற்கான வரி ஒதுக்கீடு
27. மத்திய சாலை நிதி மூலம் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள்
28. புலி பாதுகாப்புக்கான திட்டம்
29. யானை பாதுகாப்புக்கான திட்டம்
30. தனியார் உதவியுடன் திட்டங்களுக்கான மத்திய நிதி உதவி (கடனாக)
31. தனியார் உதவியுடன் திட்டங்களுக்கான மத்திய நிதி உதவி (நிதி)
(ஆ) நிதி மாற்றத் திட்டம்
1. கால்நடை வளர்ச்சி
2. ஒருங்கினைந்த தோட்டகலை மேம்பாட்டு இயக்கம்
3. தேசிய விவசாய நலத் திட்டம்
4. தேசிய கால்நடை இயக்கம்
5. திடமான வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
6. பால் பண்ணை நலத் திட்டம்
7. கால்நடை சேவை மற்றும் விலங்குகள் சுகாதாரம்
8. தேசிய ஊரக குடிநீர் திட்டம்
9. தூய்மையான பாரத திட்டம் (ஊரகம் மற்றம் நகர்புற)
10. தேசிய மரம் வளர்ப்புத் திட்டம்
11. கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தேசிய திட்டம்
12. தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் தடுப்புத் திட்டம்
13. தேசிய சுகாதார இயக்கம்
14. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம்
15. தேசிய நடுநிலைக் கல்வித் திட்டம்
16. உயர்நிலைக் கல்விக்கான உதவி
17. நிதித்துறை உள்கட்டமைப்பு வசதிக்கான வளர்ச்சி
18. தேசிய நில பதிவு நவீனத் திட்டம்
19. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்
20. ஊரக வீட்டு வசதி அனைவருக்கும் வீடு
21. ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி சேவை
22. ராஜீவ் காந்தி விளையாட்டுத் திட்டம்
23. பிரதம வேளாண் நுண் பாசன திட்டம்
24. விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன பலன் மற்றும் வெள்ள மேலாண்மை திட்டம்
(இ) நிதி ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட திட்டங்கள்
1) தேசிய இணைய அரசு முறைத் திட்டம்
2) பிற்படுத்தப்பட்ட மண்டல நிதி
3) காவல் படையை நவீனப் படுத்துதல்
4) ராஜீவ் காந்தி பஞ்சாயத்து அதிகாரம் அளித்தல் திட்டம்
5) ஏற்றுமதி உள்கட்டமைப்பை மாநிலங்கள் மேம்படுத்துவதற்கான மத்திய உதவித் திட்டம்
6) 6000 மாதிரி பள்ளிகள் அமைப்பதற்கான திட்டம்
7) உணவு பதப்படுத்தலுக்கான தேசிய இயக்கம்
8) சுற்றுலா உள்கட்டமைப்பு