கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர கால நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை: அரசு

கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர கால நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை: அரசு
Updated on
1 min read

கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர கால நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று பேசிய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, "கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர கால நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை. கருப்புப் பணத்தை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளோம்.

அயல்நாட்டு அரசுகளுடன் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் விவரங்களைப் பெறுவதிலும் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

எதிர்காலத்தில் கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த ரியல் எஸ்டேட் போன்ற பெருமளவில் பணப்புழக்கம் இருக்கும் பரிவர்த்தனைகளை ஆன் லைனில் மேற்கொள்ளும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கருப்புப் பணத்தை இந்தத் தேதியில் திருப்பிக் கொண்டுவருவோம் என்றெல்லாம் கால நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in