

பிரதமர் மோடியால் தொடங்கிவைக் கப்பட்ட கிராமத்தைத் தத்தெடுக் கும் சான்சத் ஆதர்ஷ் கிராம் திட்டத் தின் கீழ் இதுவரை 661 எம்.பி.க் கள் கிராமங்களைத் தத்தெடுத் துள்ளனர்.
இதுதொடர்பாக ஊரக மேம் பாட்டுத் துறை அமைச்சர் வீரேந்திர சிங் மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:
ஊரகப் பகுதிகளில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் விதத் தில் கிராமத்தைத் தத்தெடுக்கும் திட்டம் பிரதமரால் அறிமுகம் செய் யப்பட்டது. கடந்த அக்டோபர் 11-ம் தேதி வரை 661 எம்பி.க்கள் கிரா மங்களைத் தத்தெடுத்துள்ளனர். அதாவது, 84 சதவீத எம்.பி.க்கள் இத்திட்டத்தின் கீழ் கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர். மக்களவை எம்.பி.க்கள் 485 பேரும், மாநிலங் களவை எம்.பி.க்கள் 176 பேரும் இத்திட்டத்தின் கீழ் கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர். இத்திட்டத் துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
திட்ட அமலாக்கத்தை தேசிய அளவிலான இரு குழுக்கள் கண்காணிக்கும். இக்குழுக்களில் ஒன்று ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரின் கீழும், மற்றொன்று அமைச்சரக செயலாளர் தலைமை யிலும் இயங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.