இந்தியாவின் மகள் ஆவணப்பட விவகாரம்: பிபிசி-க்கு நோட்டீஸ்

இந்தியாவின் மகள் ஆவணப்பட விவகாரம்: பிபிசி-க்கு நோட்டீஸ்
Updated on
1 min read

நாட்டை உலுக்கிய டெல்லி பேருந்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியை பேட்டி கண்டு எடுக்கப்பட்ட ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக பிபிசி-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் யூடியூபில் உள்ள இந்த ஆவணப்படத்தையும் நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தத்தை பிபிசி மீறிவிட்டதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

“ஆவணப்படத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு தேவையான அனுமதிகளை பிபிசி பெறவில்லை. இதனால் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். மேல் நடவடிக்கைக்கு காத்திருக்கிறோம்.” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கு முன்னதாகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தை இயக்கிய லெஸ்டி உட்வின், வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப் படமாட்டாது என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் பிபிசி இதனை ஒளிபரப்ப முழு உரிமையையும் விற்றுள்ளார் என்பதே தற்போதைய நடவடிக்கைக்குக் காரணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in