Last Updated : 02 Mar, 2015 03:32 PM

 

Published : 02 Mar 2015 03:32 PM
Last Updated : 02 Mar 2015 03:32 PM

காஷ்மீரில் மஜக-பாஜக எதிர்காலம் என்னவாகும்?- ஒமர் சந்தேகம்

ஜம்மு-காஷ்மீரில் மஜக(மக்கள் ஜனநாயகக் கட்சி)-பாஜக (பாரதிய ஜனதா கட்சி) கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் #wondering எனும் ஹேஷ்டேகை உருவாக்கி அதில் தனது கருத்துகளை பதிந்துள்ள ஒமர் காஷ்மீர் அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

"காஷ்மீரில் மஜக-பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என முப்தி முகமது முயற்சிக்கிறாரா? முப்தி-மோடி கூட்டணி தவறான முடிவு என முடிவு செய்துவிட்டாரா? அல்லது முப்தி முகமதும் அவரது மகள் மெஹ்பூபா முப்தியும் சேர்ந்து இயற்றியுள்ள இந்த சர்ச்சை காரணமாக பாஜக தானாகவே கூட்டனியில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகின்றனரா?" என பல்வேறு கேள்விகளை #wondering கீழ் ஒமர் எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் முதல்வராக முப்தி முகமது சையத் பதவியேற்ற பின்னர் தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே, பாகிஸ்தானையும், பிரிவினைவாதிகளையும் பாராட்டிப் பேசியிருப்பது பாஜகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x