

நாடு முழுவதும் பசுவதை தடையை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டம் அமல் செய்யப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல நாடு முழுவதும் பசுவதை தடையை அமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாடு முழுவதும் பசுவதைத் தடையை அமல்படுத்துவது அவ்வளவு எளிது இல்லை. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனினும் பசுவதைத் தடையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.