

வெளியுறவு அமைச்சராக பொறுப் பேற்றுள்ள சுஷ்மா ஸ்வராஜுடன் அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி புதன்கிழமை இரவு தொலைபேசி யில் தொடர்புகொண்டு பேசினார்.
இந்திய- அமெரிக்க உறவுக்கு புத்தாற்றல் கொடுப்பது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சுஷ்மா அமைச்சர் பதவி பொறுப்பேற்றதும் பேசிய வெளிநாடுகளின் தலைவர்களில் முதல் நபராகத் தொடர்பு கொண்ட வர் கெரி என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறினார்.
இந்த பேச்சில், வர்த்தக, பொரு ளாதார ஒத்துழைப்பு அளவை 50000 கோடி டாலராக உயர்த்து வதற்கு முழு கவனம் கொடுத்து இரு தலைவர்களும் விவாதித் தனர்.
சர்வதேச நிலையிலான ஒத்துழைப்பு வலுவடைய இந்தியா ஆர்வம் காட்டுவது பற்றி கெரியிடம் சுஷ்மா சுட்டிக் காட்டினார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளுடன் இந்தியா தொடர்புடன் இருப்பதையும் சுஷ்மா எடுத்துச் சொன்னார்.
ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதற்கு இருவரும் ஆர்வம் வெளிப்படுத்தினர் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முன்னதாக, நரேந்திர மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவுக்கு மோடியை வரவேற்க ஒபாமா நிர்வாகம் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கெரி தெரிவித்தார்.