

‘டீ’ கொடுக்க தாமதமானதால் ஓட்டல் உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள் ளார்.
ஹைதராபாதில் உள்ள பேகம்பேட்டையில் எம்.ஜி. கேஃப் எனும் சிறிய ஓட்டலை ஜஹாங்கீர் என்பவர் நடத்தி வந்தார். இவரது கடைக்கு நேற்றுமுன் தினம் மாலை வந்த இரண்டு பேர், டீ போடுமாறு கூறினார்.
அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவருக் கும் டீ வழங்க சிறிது காலதாமத மாகியுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த இருவரும் ஜஹாங்கீ ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அங்கிருந்த வர்கள் தடுக்க முயன்றபோது இருவரும் தப்பியோடி விட்டனர்.
சுமார் அரை மணி நேரம் கழித்து மேலும் சிலருடன் இருவரும் டீ கடைக்கு வந்தனர். அவர்கள் ஜஹாங்கீரை மீண்டும் சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அந்த கும்பலில் சிலர் ஜஹாங்கீரை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேகம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறை வானவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.