

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ மறைவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3.18 அளவில் பிரிந்தது.
லீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரணாப் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ மறைவுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன்னதமான ஒரு தலைவரின் இழப்பால் ஆசிய நாடு வருத்தம் அடைகிறது" என்று தெரிவித்துள்ளார்.