Published : 30 May 2014 09:45 AM
Last Updated : 30 May 2014 09:45 AM

பிரதமரின் முதன்மைச் செயலராக மிஸ்ராவை நியமிக்க அவசரச் சட்டம் ஏன்?: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

“நாடாளுமன்றக் கூட்டம் நடை பெறவில்லை; புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவில்லை. இந்நிலை யில் பிரதமரின் முதன்மைச் செய லாளராக நிருபேந்திர மிஸ்ராவை நியமிப்பதற்கு வசதியாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது ஏன்?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நிரு பேந்திர மிஸ்ராவை மத்திய அரசு கடந்த புதன்கிழமை நியமித்தது. முன்னதாக அவர், அப்பதவியில் அமர்வதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிருபேந்திர மிஸ்ரா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவராவார். மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மிஸ்ரா, இறுதியாக டிராய் அமைப்பின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.

டிராய் அமைப்பின் சட்டத்தின் படி, தலைவராக இருந்து ஓய்வு பெறுபவர்கள் மத்திய, மாநில அரசு களில் எந்தவொரு பதவியிலும் அமரக் கூடாது என்று உள்ளது. இந் நிலையில், பிரதமரின் முதன்மைச் செயலாளராக மிஸ்ரா பதவியேற் பதற்கு ஏதுவாக டிராய் அமைப் பின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

காங்கிரஸ் கேள்வி

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகை யில், “நாடாளுமன்றம் விரைவிவ் கூடவுள்ள நிலையில், அவசர அவசரமாக மிஸ்ரா நியமனத் திற்கு ஏதுவாக அவசரச் சட்டத்தை பிறப்பித்தது ஏன்? அவசரச் சட்டத்தை பிறப் பித்து அவரது நியமனத்தை உடனடி யாக மேற்கொள்ளும் அளவிற்கு என்ன அவசியம் இப்போது ஏற் பட்டுள்ளது? ” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x