

எல்லை பாதுகாப்புப்படையின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 27 பெண்கள் கொண்ட குழுவினர் குஜராத்தின் பூஞ்ச் நகரில் இருந்து பஞ்சாபின் அட்டாரிக்கு 2300 கி.மீட்டர் தொலைவுக்கு ஒட்டக சவாரி மேற்கொள்கின்றனர். இதனை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் பெண் வீராங்கனை பச்சேந்திரி பால் தலைமையேற்று வழிநடத்துகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மருக்கு வந்த அவர் கூறியதாவது: ஒரு பெண் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட்டால் அதற்கு அடுத்து அவர் எட்டிப்பிடிக்க இலக்கு என்று எதுவும் இருக்காது.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது கூட எளிதானதுதான். ஆனால் நாட்டின் எல்லையைக் காக்கும் பணி மிகவும் கடினமானதாக இருக்கிறது. மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் உள்ள எல்லையில் கடுங்குளிரை தாங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினம் என்றார் அவர்.