

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சிகரெட் மீதான வரியை மிசோரம் மாநில அரசு 13.5%-ல் இருந்து 20% ஆக நேற்று உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து மாநில வரிவிதிப்புத் துறை அமைச்சர் லால்சாதா கூறுகையில், “சிகரெட் மீதான வரி ராஜஸ்தானில் 65 சதவீதமாக உள்ளது. எனினும் அண்டை மாநிலங்களுக்கு இணையாக இந்த வரியை நாங்கள் 20 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்” என்றார்.
அரசின் இந்த முடிவை, மிசோரம் மாநில புகையிலை கட்டுப்பாட்டு சங்கம் வரவேற் றுள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் ஜேன் ஆர். ரால்டி கூறுகையில், “புகை யிலை பயன்பாட்டில், இந்திய அளவில் மட்டுமன்றி, உலக அளவிலும் மிசோரம் முன்னி லையில் உள்ளது.
இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கை ஆக்கப்பூர்வ மானது. இதனால் மாநிலத்தில் புகையிலை பயன்பாடு குறையும்” என்றார்.
புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்தக் கோருவதே இன்று கொண்டாடப்படும் உலக புகையிலை தினத்தின் மையப் பொருளாகும்.
இந்நிலையில் தற்செயலாக மிசோரத்தில் புகையிலை மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.