Published : 08 Mar 2015 10:41 AM
Last Updated : 08 Mar 2015 10:41 AM

ஒவ்வொரு பெண் தொழில்முனைவோரும் ஒரு பெண்ணை தொழில்முனைவோராக்க வேண்டும்: சிட்கோ மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்

பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட, ஒவ்வொரு பெண் தொழில்முனைவோரும் இன் னொரு பெண்ணை தொழில் முனைவோராக்க வேண்டும் என்று சிட்கோ மேலாண் இயக்கு நர் ஜக்மோகன் சிங் ராஜூ அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் மற்றும் ‘தி இந்து - பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் உலக மகளிர் தின விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிட்கோ மேலாண் இயக்குநர் ஜக்மோகன் சிங் ராஜூ, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த தொழில்முனை வோர் விருதை லாவண்யாவுக்கும், சிறந்த சமூக ஆர்வலர் விருதை ஓவியாவுக்கும், சிறந்த எழுத் தாளர் விருதை மருத்துவர் கமலி ஸ்ரீபாலுக்கும் வழங்கி கவுரவித்தனர்.

பின்னர், ஜக்மோகன் சிங் ராஜூ பேசியதாவது:

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருப்பதைப்போல, ஒவ்வொரு பெண் தொழில்முனைவோரின் வெற்றிக்குப் பின்னால் சிட்கோ, ரிசர்வ் வங்கி, மாவட்ட தொழில் மையம் ஆகியவை இருக்கின்றன.

பெண்கள் வீடுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்குவது, வீட்டு வரவு- செலவுகளைக் கணக்கிடுவது ஆகிய அனுபவம் உள்ளதால், அவர்கள் தொழில்முனைவோரா வது எளிது.

பெண்கள் சமூக, பொருளா தாரத்தில் மேம்பட வேண்டுமென் றால் தொழில்முனைவோராக வேண்டும். ஒவ்வொரு பெண் தொழில்முனைவோரும் ஒரு பெண்ணை தொழில்முனைவோ ராக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா பேசியதாவது:

பெண்கள் தொழில்முனைவோ ராக வருவதற்கு அரசும், வங்கி களும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாலும், நாட்டில் உள்ள பெண் தொழில்முனைவோ ரில் 12 சதவீதத்தினர் மட்டுமே வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்குகின்றனர். இதை 15 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கி பெண் தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் வழங்குவதை முன்னுரிமை பணியாக செய்து வருகிறது. பெரிய நிறுவனங் களுக்கு தங்கள் உற்பத்திப் பொருட் களை கொடுத்து, அவற்றிடம் பணம் பெறுவதில் சிக்கல் இருந்தாலும், பெண் தொழில்முனைவோருக்கு நிதி அளிக்க தனி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அல்லது பெண் தொழில்முனைவோர் நலச் சங்கத்தை அணுகி பெண்கள் விளக்கம் பெறலாம்.

நிகழ்ச்சியில் மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், வரம் கேபிடல் நிறுவன நிறுவனர் லதா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று இலவசப் பயிற்சி

மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் சார்பில் கிண்டியில் இன்று, நாப்கின் மற்றும் மணப்பெண் அலங்காரம் செய்வதற்கான பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அளிக்கப்படும். மதிய உணவும் வழங்கப்படும். பயிற்சியில் பங் கேற்க விரும்புவோர் 93810 42346, 89394 60595 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x