

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினருக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா போன்றவற்றை பிரபலப் படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பு களுக்குப் பதிவு செய்ய வேண்டிய தில்லை. அதேபோல எந்த வித கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்த வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.