Published : 03 Mar 2015 10:12 AM
Last Updated : 03 Mar 2015 10:12 AM

தெலங்கானாவில் லஞ்சம் வாங்க மறுத்த போலீஸ்காரருக்கு முதல்வர் பாராட்டு

லஞ்சம் வாங்க மறுத்த காவலரை தெலங்கானா முதல்வர் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஹைதராபாத்தில் கான்ஸ்ட பிளாக பணியாற்றி வரும் ஜி. நாராயணராவ் பாஸ்போர்ட் டுக்காக விண்ணப்பித்தவர் களிடம் விசாரணை நடத்தும் பொறுப்பில் உள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பாஸ்போர்ட் விசா ரணைக்காக சென்றார். விசா ரணை முடிந்தபின்னர், பாஸ் போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர், நாரயணராவிடம் ரூ. 1,500 லஞ்சம் கொடுத்துள்ளார். அதனை வாங்க நாரயணராவ் மறுத்துவிட்டார். இதனால், மேலும் ரூ.1,000 சேர்த்து ரூ.2,500 வழங்க முயன்றுள்ளார்.

அதனையும் மறுத்த நாராயணராவ், “தெலங்கானா காவல்துறைக்கு போதுமான ஊதியம் வழங்கப்படுகிறது. இத னால், லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறி யுள்ளார். இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் மிகுந்த ஆச்சர்ய மடைந்தார். இவர் தெலங்கானா முதல்வரின் குடும்ப மருத்துவ ராவார். அவர், உடனடியாக முதல்வர் சந்திரசேகர ராவிடம் நடந்த விஷயங்களை தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த முதல்வர், நாராயண ராவை தனது அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்தார். அங்கு, ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் மஹேந்தர் ரெட்டி, சிறப்பு பிரிவு துணை ஆணையர் நாகிரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், நாராயண ராவின் நேர்மையை வெகுவாக பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x