

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியை உடனடியாக மூட வேண்டும், இல்லையென்றால் அதனை எரித்து விடுவோம் என்று அந்தப் பள்ளிக்கு சில மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது புனித கபிடானியோ பள்ளி. இங்கு நேற்று ஐந்து மிரட்டல் கடிதங் கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் ‘இந்தப் பள்ளியை உடனடி யாக மூட வேண்டும். மேலும் இங்கு பணிபுரியும் 13 கன்னியாஸ்திரி களையும் வெளியே அனுப்ப வேண் டும். இல்லையென்றால் இந்தப் பள்ளியை தீயிட்டுக் கொளுத்து வோம்' என்று மிரட்டப்பட்டிருந்தது.
இந்தக் கடிதங்களை எழுதிய வர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் கடந்த வாரத்தில் முதிய கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
மேலும் அவரது பள்ளியும் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. அந்த நிகழ்வு நடந்த சில நாட் களுக்குள்ளேயே இந்த மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதனால் அங்கு மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் பூடான் எல்லைக்கு அருகே அமைந்தி ருக்கும் இந்தப் பள்ளியில் சுமார் 1,700 மாணவர்கள் படித்து வருகி றார்கள். அவர்களில் பெரும்பான்மை யானோர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.