

தலைநகர் டெல்லியில் சாலையோர டீக்கடையில் வேலை செய்யும் 15 வயது சிறுவன் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக என்.ஜி.ஓ. ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதமும் அனுப்பியுள்ளார் இவர்.
ரிதேஷ் என்ற இந்த 15வயது சிறுவன் பீகாரிலிருந்து டெல்லிக்கு பிழைப்பு தேடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"நான் தலைவராக வேண்டும், மோடிஜி அது முடியாததல்ல என்பதை எனக்கு உணர்த்தியுள்ளார்" என்கிறார் ரிதேஷ்.
தெருக்குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு ஒன்றில் ரிதேஷ் உறுப்பினர். பிரதமர் அலுவலகம் மட்டுமல்லாது பாஜக அலுவலகத்திற்கும் இவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் பதவியேற்கும் மோடி இந்தச் சிறுவனின் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார் என்று தான் நம்புவதாக தெருக்குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் சஞ்சய் குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.