

செசல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக டெல்லியில் இருந்து நேற்று அவர் செசல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு புறப்பட்டார்.
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடான செசல்ஸில் குஜராத்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின் றனர். அங்கு மோடியை வரவேற்று ஆங்கிலம், குஜராத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
செசல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலை பிரதமர் மோடி இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது கடல்சார் பாதுகாப்பு, மரபுசாரா எரிசக்தி, சுகாதாரம், கல்வி தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1981-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செசல்ஸ் தீவுக்கு சென்றார். அதன்பின்னர் அங்கு செல்லும் இரண்டாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.
மொரீஷியஸில் 2 நாள் பயணம்
செசல்ஸ் நாட்டில் இருந்து இன்றிரவு மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸுக்கு இரண்டு நாள் பயணமாக மோடி செல்கிறார். 70 சதவீத இந்திய வம்சாவளியினர் வாழும் அந்த நாட்டின் தேசிய தின விழாவில் அவர் பங்கேற்கிறார்.
அதிபர் கைலாஷ் புர்யாக், எதிர்க் கட்சித் தலைவர் பால் பெரேங்கர் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர் களை சந்தித்துப் பேசுகிறார். மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் நாளை அவர் உரையாற்றுகிறார்.
இப் பயணத்தின்போது அந்த நாட்டுக்கு அதிநவீன ரேடார் கருவிகளை மோடி வழங்குகிறார். மேலும் கடல்சார் பாதுகாப்பு, பொரு ளாதாரம், மீன்வளம், துறைமுகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிஜிஎஸ் பாராகுடா போர்க்கப்பல் கடந்த மாதம் மொரீஷியல் நாட்டுக்கு வழங்கப்பட்டது. அதனை மோடி அந்த நாட்டு கடற்படைக்கு அர்ப்பணிக்கிறார்.
13, 14-ல் இலங்கை பயணம்
மொரீஷியஸில் இருந்து இலங்கைக்கு செல்லும் மோடி அங்கு மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அந்த நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவ காரங்கள் குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தின்போது தமிழர் பகுதி களுக்கும் பிரதமர் மோடி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்திய பெருங்கடலில் சீனா தனது ஆதிக் கத்தை அதிகரித்து வருகிறது. அதை முறியடிக்கும் வகையில் இந்திய பெருங்கடல் நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி இப்போது சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
தேசிய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவல், வெளியுறவுச் செய லாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் நிலைக் குழுவும் பிரதமர் மோடி யுடன் சென்றுள்ளது.