Published : 06 Mar 2015 10:12 AM
Last Updated : 06 Mar 2015 10:12 AM

டெல்லியில் ஹோலி கொண்டாடும் லாலு: பிஹாருக்கு வராததால் கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம்

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்த ஆண்டு டெல்லியில் ஹோலியைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார். இதனால் அவரது கட்சித் தொண்டர் கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் பல்வேறு வண்ணப் பொடிகளைப் பூசி, விளையாடி மகிழ்வது வழக்கம். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர் களுடன் வண்ணம் பூசி மகிழ்வார் கள். இதற்காக, அவர்கள் தங்கள் கட்சித் தலைமையகங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வது வழக்கம். டெல்லியின் அரசு பங்களாவில் தங்கியுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் ஹோலி கொண்டாடுவது உண்டு.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிஹாரில் லாலு கொண் டாடும் ஹோலி மிகவும் வித்தி யாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். மேள, தாளங்களுடனான இந்தக் கொண்டாட்டத்தின்போது, கட்சித் தொண்டர்கள் மீது லாலு வண்ணங்களைப் பூசுவதுடன் மேளத்தை வாங்கி தானே வாசிக்கத் தொடங்கி விடுவார்.

மேலும் தொண்டர்கள் புத்தம் புதிதாக அணிந்து வரும் குர்தா, பைஜாமாக்களை பிடித்து கிழித்து விடுவார். இதற்காக கட்சித் தொண்டர்கள் வரிசையில் நிற்பதுண்டு. இவர்களில் சில குறும்புக்கார தொண்டர்கள், லாலு அணிந்துள்ள பைஜாமா குர்தாவை கிழிக்கவும் தவறுவதில்லை.

இந்நிலையில், ஹோலி பண்டிகையான இன்று லாலு டெல்லியிலேயே தங்கிவிட்டார். இதனால் தங்கள் தலைவருடன் ஆனந்தமாக ஹோலி கொண்டாடும் வாய்ப்பு கிடைக்காததால், அவரது தொண்டர்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் சிவச்சந்தர் ராம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையின் போது, லாலுஜி பாட்னாவில் எங் களுடன் வித்தியாசமாக விளையாடி மகிழ்வதுடன், எங்களையும் மகிழ் விப்பார். இடையில் ரயில்வே துறை அமைச்சரானபோது சில ஆண்டு கள் டெல்லியில் ஹோலி கொண்டா டினார். அப்போதுகூட தொண்டர்கள் இங்கிருந்து டெல்லிக்கு சென்றது உண்டு. இந்த முறை டெல்லியில் அரசு வீட்டையும் அவர் காலி செய்து விட்டதால் அவருடன் ஹோலி கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்றார்.

கடந்த ஆண்டு மும்பை மருத்துவ மனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் உடல்நலத் தில் கவனம் செலுத்துமாறு 66 வயதான லாலுவுக்கு அவரது மருத்துவர்கள் அறிவுறுத்திய தாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த ஆண்டு டெல்லிக்கு அருகில் உள்ள குர்கான் பண்ணை வீட்டில் தனது குடும்பத்தாருடன் மட்டும் ஹோலி கொண்டாட இருக்கிறார்.

சமீபத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ் எம்பியை மணம் புரிந்த லாலுவின் கடைசி மகள் ராஜலட்சுமியும் தனது தந்தையுடன் ஹோலியைக் கொண்டாட அங்கு வருகை தர இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x