

சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளிதழான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது:
மக்களவையில் பாஜகவுக்கு போதுமான உறுப்பினர் எண் ணிக்கை இருந்தும் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை நிறை வேற்ற கடுமையாக உழைத்த னர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரிக்கமாட்டோம் என்ற எங்களின் வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில்தான் வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை. விவசாயிகளுக்கு எதிரான அரசின் மசோதாவை எதிர்ப்பதால் சிவசேனாவுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?
மகாராஷ்டிரத்திலும் மத்தியி லும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். இருந்தும் மசோதாவை எதிர்த்தோம். எங் களுக்கு பாசாங்கு மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். கனவுகளை விதைத்து விவசாயிகளிடம் வாக்கு கேட்டு, பெரும் வாக்குறுதிகளை அளித்து விட்டு, அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்களின் ஒப்புதலின்றி நிலத்தைப் பறிக்கும் பாவத்தில் பங்கேற்க சிவசேனா ஒருபோதும் விரும்பவில்லை.
வளர்ச்சி சிறந்த பொருளா தாரத்துக்கு இட்டுச் செல்லும். தொழிற்துறை வளர்ச்சி ஊக்குவிக்கும். ஆனால், இவை விவசாயிகளின் வாழ்வாதாரத் துக்கு ஊறுவிளைவித்துவிட்டு நடைபெறக்கூடாது.
நாட்டின் நிதித் தலைநகரான மும்பையிலிருந்து முக்கிய அலுவலகங்கள், வைரச் சந்தை உள்ளிட்ட சில முக்கிய வர்த்தகங்களை இடமாற்றுவது யாருக்கும் பயனளிக்காது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.