‘செல்போன் ஆப்’ மூலம் காங்கிரஸில் உறுப்பினராகும் திட்டம்: மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்

‘செல்போன் ஆப்’ மூலம் காங்கிரஸில் உறுப்பினராகும் திட்டம்: மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

‘செல்போன் ஆப்’ மூலம் காங்கிரஸ் உறுப்பினராகும் திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார்.

டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இத்திட்டம் குறித்து பேசிய அஜய் மக்கான், காங்கிரஸின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்துள்ளவர்களை மனதில் கொண்டு இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தை மன்மோகன் சிங், குர்சரண் கவுர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். ஸ்மார்ட் போனில் இந்த ஆப் மூலம் கட்சி உறுப்பினர் படிவத்தை நிரப்பி அனுப்ப முடியும். இந்த புதிய திட்டத்தின் மூலம் இப்போது நான்காவது வழிமுறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் உறுப்பினராவது எளிதாகிறது.

ஏற்கெனவே கட்சி இணைய தளத்தில் உள்ள உறுப்பினர் படிவத்தை பயன்படுத்தி கட்சியில் இணைவது, பேஸ்புக் மூலம் கட்சியில் இணைவது ஆகிய நடைமுறைகள் உள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in